Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

சனி, 5 மே, 2012


ஒரு கல் ஒரு கண்ணாடி

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.
அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை.
ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று பாஸ்ட் பார்வர்டு கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.
இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.
குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.
ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்.
மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது.
தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!
முந்தைய மூன்று படங்களை விட இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.
உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.
ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கி விட்டார்கள். ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.
குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.
ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.
வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.
நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா.
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்.
எழுத்து- இயக்கம்: ராஜேஷ் எம்.
தயாரிப்பு: ரெட் ஜெயன்ட்


தனுஷின் “3”

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பிற்கு பின்பு தனுசின் “3“ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
திரைக்கதை தனுஷின் வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது. பள்ளிப் பருவத்தில் காணப்படும் நாயகன் தனுஷ் தன்னுடைய பள்ளிப் பருவத்திற்கே திரும்பியுள்ளார்.
நாயகன் தனுசும், நாயகி ஸ்ருதியும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களாக வருகிறார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் ஆரம்பமாகிறது.
பள்ளிப் பருவத்தில் நாயகி ஸ்ருதியை கவர நாயகன் தனுஷ் செய்யும் விளையாட்டுகள் ரசிகர்களை கை தட்ட வைக்கிறது.
பின்னர் கல்லூரி வரை செல்லும் இந்த காதலர்கள் வழக்கம் போல திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். திருமணத்திற்கு பெற்றோரிடம் சம்மதம் கேட்க, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு, இவர்களது திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்கு பின்பு நாயகன் தனுஷ், நாயகி அம்மாவாக நடித்துள்ள ரோகிணியிடம் பேசும் காட்சிகள் எதார்த்தமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் சிவாகார்த்திகேயன் தன்னுடைய டைமிங் நகைச்சுவையால் கலக்குகிறார்.
இந்நிலையில் தனுஷின் “கொலைவெறி” கிறுக்குத்தனம் ஆரம்பமாகிறது.
அதாவது தனுஷ் “பை போலார் டிஸ் ஆர்டர்” என்ற மனநோயால் பாதிக்கப்படுகிறார். இந்த வியாதியை திருமணத்திற்கு பின்பு தன் மனைவி ஸ்ருதியிடமிருந்து மறைக்கிறார். இதற்கு பின்பு என்ன நடக்கிறது என்பது தான் “3” திரைப்படத்தின் திரைக்கதை.
”கொலைவெறி” பாடல் மூலம் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய காட்சிப் பிழைகள், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை “3” ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவை புகழ்வதில் தவறில்லை.
இருப்பினும் செல்வராகவனின் உதவியாளர் என்பதால் துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களின் சாயல்களை “3” திரைப்படத்தில் காணமுடிகிறது.
ஆனால் இப்படத்தின் மூலம் ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை என்ற நிலை உறுதியாக வந்துவிட்டது. திரையுலகில் “3” படம் அவருக்கென்று தனி மதிப்பை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
நாயகன் தனுஷ் சாதரணமாக நடிப்பதை விட கிறுக்கனாக நடிப்பதில் திறமையாக செயற்படுகிறார். ஆனால் இனி அடுத்து வரும் படங்களில் ரசிகர்கள் தனுஷை சைக்கோவாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.
நாயகி ஸ்ருதியின் நடிப்பு ஏழாம் அறிவில் இருந்து ஒரு படி முன்னேறியே உள்ளது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் ரசிகர்களால் சகிச்ச முடியவில்லை.
இயக்குனர் ஐஸ்வர்யா என்பதை மறந்து தனுசும், ஸ்ருதியும் படத்தில் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டியுள்ளனர். சிவகார்த்திகேயன் காமெடி கலட்டா மிகப் பிரமாதம், சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது. சந்தானம் ஏதோ வந்து போகிறார். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து(நண்பன் ஒருவனைத் தவிர), மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி. லாஜிக் மீறல் கொஞ்சம் அதிகம்.
அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும் படியாக உள்ளது. உலகமெங்கும் ஹிட்டான ”கொலவெறி” பாடலே இதற்கு சாட்சி. வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை.
இளைஞர் பட்டாளத்திற்கு “3” திரைப்படம் நிச்சயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. “3” படத்தின் மூலம் ஐஸ்வர்யாவுக்கு திரையுலகில் மதிப்பு இனி அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன், இளையதிலகம் பிரபு, பானுப்பிரியா, ரோஹிணி, சந்தானம், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா தனுஷ்

முப்பொழுதும் உன் கற்பனைகள்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஒரு வித சைக்கோத்தன காதல் கான்சப்ட்டை மையமாக வைத்துகொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எல்ரெட் குமார்.
கான்சப்ட் பழசாக இருந்தாலும், படம் எடுத்திருக்கும் விதத்தில் ஏதாவது புதுசாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.
சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆருதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது.
இந்த நிலையில் அமலா பால் அமெரிக்கா சென்று விடுகிறார். அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும் என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.
அமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார்? என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
அப்படி அவர் என்ன பார்த்தார்? அமலா பாலை காதலிக்கும் அதர்வா, அவரை தனது அலுவலகத்தில் பார்த்தும் கூட எந்தவிதமான உணர்வையும் ஏன் வெளிப்படுத்தி கொள்ளவில்லை. அவர் எதற்காக கொலை செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'.
சில படங்களின் கதைக்கும், அதன் தலைப்புக்கும் சம்மந்தமே இருக்காது. அந்த வகையில் இந்த படத்தை பொறுத்தவரையில் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதை மிகப்பொருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கருவை சுமந்துகொண்டு தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளிவந்திருக்கிறது என்றாலும், சில காட்சிகளின் மூலம் படத்தை கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அடுத்த நொடியிலேயே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகிக்கவும் முடிகிறது.
பானா காத்தாடியில் பார்த்த பள்ளி பருவ அதர்வாவை இந்த படத்திலும் சில இடங்களில் பார்க்க முடிகிறது. பாடல் காட்சிகள், சண்டைகாட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமென்ட் காட்சிகள் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் அதர்வா, வசனம் உச்சரிப்பதில் மட்டும் ஏன் தான் வட இந்தியர் போல் பேசுகிறாரோ.
அமலா பாலை சுற்றி கதை நடப்பதாக இருந்தாலும் அவருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. அதர்வாவுடன் காதல் செய்யும் காட்சிகள்தான் அதிகம். அதை நன்றாகவே செய்திருக்கிறார்.
சந்தானத்தின் வரும் சில காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கிறது. ஜெயப்பிரகாஷ்க்கு டைலர் மேட் ரோல் என்று சொல்லலாம். அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சில காட்சிகளில் வந்தாலும் பாராட்டு பெறும் அளவுக்கு தனது பணியை செய்திருக்கிறார். சிறு வயது அதர்வாவாக நடித்திருக்கும் சிறுவன் ரொம்பவே கியூட்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் துல்லள் ரகம். தாமரையின் வரிகளில் பாடல்களும் புரியும் விதத்தில் இருக்கிறது. சக்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறார்கள். இவர்களைப் போலவே காஸ்ட்யூம் டிசைனர் தீபாலி மற்றும் சண்டைபயிற்சியாளர் ராஜசேகரும் தங்களது பணியை கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த ரகம் தான் என்றாலும், தனது திரைக்கதையின் மூலம் அதை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் இயக்குநர். வெவ்வேறு கதைகளங்களை ஒன்றாக இணைப்பது போன்ற முயற்சியை செய்திருக்கும் இயக்குநர் அந்த இடங்களில் ரசிகர்களை சிறிது குழப்பமடைய செய்திருக்கிறார்.
படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், திரைக்கதை அமைத்த விதம், லொக்கேஷன், சண்டைக்காட்சிகள் அமைத்திருக்கும் விதம், பாடல்கள், ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரி என ஒட்டு மொத்த படமும் ஒரு தரமான படமாக உள்ளது.

மெரினா

உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினா திரைக்கதை.
கொலிவுட்டில் பசங்க திரைப்படத்தின் மூலம் சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சந்தோசங்கள், அவர்களின் மூலமாக குடும்பங்களில் ஏற்படும் உறவுகள் போன்ற விடயங்களை திரையின் மூலமாக எடுத்துக்காட்டிய இயக்குனர் பாண்டிராஜ், மீண்டும் சிறுவர்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் மெரினா.
உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினாவின் திரைக்கதை.
மெரினா கடற்கரையோடு தொடர்புள்ள காதலர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒன்றாக சேர்த்து இயக்குனர் பாண்டிராஜ் மெரினா திரைப்படத்தில் காட்டியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். நாயகி ஓவியாவுக்கு மெரினாவின் மூலம் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி (பக்கடா பாண்டி) மெரினாவில் தங்குகிறான். அங்கு அவனைப் போலவே பல சிறுவர்கள் சுண்டல், சங்கு என்று பலவற்றை விற்று வயிற்றை கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.
அவனுக்கு முதலில் கைலாசம் நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள்.
இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தபால்காரர், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான நாதன் (சிவகார்த்திகேயன்)-சொப்பன சுந்தரி(ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.
படத்தின் நாயகன் பக்கடா பாண்டி தான். மிரள மிரள சென்னையை பார்க்கும் போதும், பிச்சைக்கார தாத்தாவிடம் உறவு கொண்டாடும் போதும், நண்பனை இழந்து வாடும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறான்.
சிறுவர்களை வைத்து படமெடுப்பது பாண்டிராஜுக்கு கை வந்த கலையாகிவிட்டது என்று உறுதியா சொல்லலாம். எல்லா சிறுவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
பல பாத்திரங்கள் மெரினாவில் இருந்தாலும் மருமகள் தொல்லையால் வீட்டிலிருந்து வெளியே வந்து பிச்சை எடுக்கும் தாத்தா மட்டுமே மனதில் நிற்கிறார். பைத்தியக்காரனாக வருபவர் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும் அவர் பாத்திரத்தில் கொஞ்சம் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது.
மெரினாவில் குடியிருக்காவிட்டாலும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போவதற்கு அங்கு வரும் காதல் ஜோடிகளான சிவகார்த்திகேயனும், ஓவியாவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள். இவர்களுடைய காதலை நேரம் போவது தெரியாமல் சுவையாக இயக்குனர் பாண்டிராஜ் சொல்லியிருக்கிறார்.
நாயகன் சிவகார்த்திகேயன் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இனி இவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் குவியும் என்று கொலிவுட்டில் தகவல் வந்துகொண்டேயிருக்கின்றன.
களவாணி திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போன நாயகி ஓவியா மெரினாவில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார்.
பல நடிகர்களோடு சேர்த்து இசையமைப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று பலரை மெரினாவில் இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். " வாழ வைக்கும் சென்னை " பாடலும் நண்பன் " பாடலும் முனுமுணுக்க வைக்கின்றன.
5 டி கமெராவில் படம்பிடித்து தன் ஒளிப்பதிவால் மெரீனாவையே சுத்தமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்க்கு பாராட்டுக்கள்.
மெரினாவை மட்டுமே வைத்துக்கொண்டு முழு படத்தையும் நகர்த்திய விதம், நகைச்சுவை ததும்பும் வசனங்கள், சிறுவர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதை, ஆதரவற்ற சிறுவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்திய பாங்கு, தாத்தா, தபால்காரர், குதிரைக்காரன் இவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இடையேயான நட்பு, காதல் என்ற பெயரில் சமுத்திரத்தை அசுத்தம் செய்யும்(கள்ள) காதல் ஜோடிகள் பற்றி சொன்ன விதம் இவையெல்லாம் மெரினாவின் அழகை ரசிக்க வைக்கின்றன.
ஆதரவின்றி கடலோரம் வாழும் சிறார்களை பற்றிய பிரச்சினைகள் கடல் அளவு இருக்க அதை முழுவதும் இறங்கி அலசாமல் பள்ளி சுற்றுலா போல சிலவற்றை மட்டும் மேம்போக்காக சொல்லியிருப்பதால் கடற்கரை சென்றும் காலை நனைக்காமல் திரும்ப வந்தது போல ஒரு குறை.
இருப்பினும் திரைப்படம் போன்ற எந்தவொரு நினைவுகளும் இல்லாமல் இயல்பான முறையில் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தவறில்லை.
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஓவியா, சிறுவன் அம்பிகாபதி, ஜெயப்பிரகாஷ், பாண்டியன், கௌதம் புருஷோத், செந்திகுமாரி, ஜித்தன் மோகன்.
சிறப்பு நடிகர்கள்: சீயான் விக்ரம், சினேகா, விமல், அமீர், சசிகுமார், பிரகாஷ்ராஜ்.
இசை: ஜி.கிரிஷ்
ஒளிப்பதிவு: விஜய்
தயாரிப்பு, இயக்கம்: பாண்டிராஜ்

நண்பன்

இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சொல்லும் கல்லூரி மாணவர்களின் கதைதான் நண்பன்.
நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில் நிச்சயமா ஜெயிப்பீர்கள் என்பதுதான். வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லிவிட்டுப் போகிறது நண்பன்.
ஏற்கனவே வெளிவந்த '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.
என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் உடன் கல்லூரியில் வந்து சேர்ந்து படிக்கிறார் விஜய். மூன்றுபேரும் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். கல்லூரியில் படித்து முடித்து ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் நண்பன் விஜய் பற்றி எந்த தகவலும் இல்லை. சில வருடங்கள் கழித்து நண்பனை (விஜய்) தேடி அவனது ஊருக்குப் போகிறார்கள். அங்கு போய் பார்த்தால், அங்கு அவனுக்கு பதிலாக வேறு ஆள் (எஸ்.ஜெ.சூர்யா) இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது விஜய் படம்தானா என்ற எண்ணம்தான்? இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களில் எல்லாம் விஜய் அறிமுகமாகும்போதே தாரை தப்பட்டை முழங்கும். பூ மழை பொழியும். இப்படித்தான் இருக்கும் விஜய்யின் அறிமுகக்காட்சிகள். இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. படத்தில் நடித்த எல்லோருமே ஒரு கேரக்டராகத்தான் வந்து போகிறார்கள்.
பஞ்சவன் பாரிவேந்தனாக வரும் விஜய்யை பார்த்தவுடனே நமக்குப் பிடித்துப் போகிறது. கல்லூரியில் சொல்லித் தருவதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான அறிவு சார்ந்த விஷயம் அல்ல எல்லாம் வேலை பார்ப்பதற்கு தேவையான ஜஸ்ட் படிப்புதான் என்கிற ரீதியில் இருக்கிறது இவர் வந்து பேசுகிற காட்சிகள் எல்லாம். விஜய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது ஆயிரம் மெசேஜ்.
நண்பன் வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கிளம்பிய விமானத்தையே திருப்பி தரை இறங்கச் செய்து விடும் ஸ்ரீகாந்த் அலட்டலில் ஆரம்பிக்கிற படம் முழுக்க முழுக்க சிரிப்பு மழைதான். சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்கவும் வேண்டிய மெசேஜ்கள் வந்து போகின்றன ஃப்ரேம் பை ஃப்ரேம். தனக்குப் பிடிக்காவிட்டாலும் அப்பாவுக்காக என்ஜீனியரிங் படித்துவிட்டு பின்பு தன் அப்பாவிடம் தனக்குப் பிடித்த போட்டோகிராபியை படிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காட்சிகள் செம டச்சிங்.
விஜய்க்கு அடுத்து பிரமாதப்படுத்தியிருப்பவர் சத்யன். குறிப்பாக அந்த கல்லூரி விழா மேடைப் பேச்சு. சான்ஸே இல்லை. ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஸ்ரீகாந்துக்கு அதிக வாய்ப்பு. நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஜீவாவின் ஏழ்மையைக் குறிக்க படம் முழுக்க ஒரு ஜிப்பாவை மாட்டிவிட்டிருப்பது நன்றாக இல்லை.
சத்யராஜுக்கு மிக முக்கிய வேடம். சரியாகத்தான் செய்திருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு. ஒரு காட்சி என்றாலும் கதைக்கு முக்கிய திருப்பம் தருகிறது எஸ்.ஜே. சூர்யாவின் பாத்திரம். அவரும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
படத்தில் காமெடி ரொம்ப ரொம்ப அதிகம். அதுவும் குலுங்கி குலுங்கி சிரிக்கிற அளவுக்கு இருக்கின்றன காமெடிகள். ஜீவாவின் அம்மா சப்பாத்தி போடும் போது செய்கிற மேனரிஸம் இருக்கிறதே தியேட்டரே செம அலப்பறையாகிறது அந்த காட்சிக்கு. இதற்காகவே ரீப்பிட்டடு ஆடியன்ஸ் நிச்சயம்.
சில காட்சிகளில் குறைகளும் இருக்கின்றன. ஆனால் அது ஒரிஜினலிலும் உண்டு. அந்த வகையில் காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் அப்படியே மொழியாக்கம் செய்த ஷங்கரை குறைசொல்ல முடியாதுதான். ஆனால் அவர் நினைத்திருந்தால், அந்தக் காட்சிகளில் இன்னும் நம்பகத்தன்மை கொண்டுவந்திருக்க முடியும்.
குறிப்பாக, அந்த பிரசவ காட்சி. என்னதான் வீடியோ கான்பரன்சிங், சக மாணவர்களின் துணை, அபார பொறியியல் திறன் கொண்டு அந்த காட்சியை சமாளித்திருந்தாலும், நடைமுறை சாத்தியம் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் காட்சிக்கு முன்பு இலியானா - விஜய் டூயட்டால் லேசாக டல்லடிக்கும் படத்தின் இரண்டாம் பாதி, இந்த பிரசவக் காட்சியின் நீளத்தால் தொங்கிப் போகிறது.
மில்லி மீட்டர் சத்யராஜை கெட் அவுட் சார் என்று சொல்லிவிட்டு தள்ளிக்கொண்டு போகும் இடம் டச்சிங். விஜய் அல்லாத ரசிகர்களும் ரசிக்கும்படியாக ஒரு படத்தை நீண்ட நாளைக்கு அப்புறம் பார்த்த திருப்தி. இதற்காக ஷங்கரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் கேமிராவை பற்றி சொல்லவேண்டுமென்றால் கலர் ஃபுல், கலக்கல் என்று இரண்டு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஹாரிஸின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது. ரீரிக்கார்டிங்கிலும் தூள் கிளப்பியிருக்கிறார். படத்திலிருக்கும் துள்ளல் ரீரிக்கார்டிங்கிலும் இருக்கிறது. ஆண்டனியின் கத்திரியில் இருக்கிறது நாசூக்கு.
ஷங்கர் மற்றும் மதன் கார்க்கியின் வசனங்கள் கூர்மை ஆனால் முக்கியமான வசனங்கள் வரும் காட்சியில் சற்றே அழுத்தம் குறைவாக இருப்பது மிக குறைந்த அளவில் தெரிகிறது. லொகேஷன்கள் மிக அருமை.
சொந்த கதையை படமாக எடுப்பது என்றால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துத் தள்ளிவிடலாம். ஆனால் அதுவே இன்னொருவரது கதை என்றால், அதுவும் ஏற்கனவே வெளிவந்த படத்தை படமாக எடுப்பது என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில்தான் எடுக்கவேண்டி இருக்கும். அதையெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் ஷங்கர். நல்ல வேளை இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் இருந்து வெளிவந்தது.
அனைத்து தரப்பினரையும் முட்டாளாக்கி 3 மணி நேரம் ஜாலியாக இருக்க வைத்த ஷங்கரை கை குலுக்கு பாராட்டுவோம்.
நடிகர்கள்: விஜய், இலியானா, ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, அனுயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: ஷங்கர்
தயாரிப்பு: ஜெமினி பிலிம்ஸ்

வெள்ளி, 4 மே, 2012


புதிய போட்டோஷொப்பில் வீடியோ எடிட்டிங்!!
வாசித்தோர் : 1677 
புகைப்படங்களை எடிற் செய்ய பயன்படுத்தப்படும் பிரபல மென்பொருளான போட்டோஷொப் மென்பொருளின் புதிய வெளியீடான போட்டோஷொப் சிஎஸ் 6 இனை அடோப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கான பீட்டா வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள இந்த வெளியீட்டில் வீடியோக்களின் வர்ணங்களையும், அவற்றின் கறுப்பு வெள்ளை விகிதத்தையும் மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய பதிப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அடோப் நிறுவனத்தில் போட்டோஷொப் உற்பத்தி முகாமையாளர்களில் ஒருவரான ஷொனைத கீ, கடந்த சில வருடங்களாக புகைப்படங்களும், வீடியோக்களும் இணைந்தவாறான நிலை ஏற்பட்டு வருவதாகவும், புதிய புகைப்படக் கமெராக்கள் வீடியொ வசதியை வழங்குவதன் காரணமாக வீடியோக்களை எடிற் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் புகைப்படங்களுக்கு மாத்திரம் எனக் காணப்பட்ட கருவிகள் தற்போது வீடியோக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருவதன் காரணமாக வீடியோக்களுக்கான வசதியை உள்ளடக்கத் தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிப்பில் வீடியோக்களை எடிற் செய்யும் வசதி பின்வரும் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முன்பை விட புகைப்படங்களை சிறப்பாக மேம்படுத்த அதிகமான கருவிகள்.

புகைப்படங்களை மங்கலாக்கும் வசதியில் மேம்படுத்தப்பட்ட வடிவம்.

எடிட் செய்வதற்கான இடைமுகம் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவில் காணப்படுகிறது.

புகைப்படங்களை வெட்டும் வசதியில் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவம். புகைப்படங்களை வெட்டும் போது புகைப்படத்தில் அளவு திரைக்கேற்றவாறு மாறுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

புகைப்படங்களில் எழுத்துக்களை தட்டச்சும் போது புதிய வடிவில் இலகுவாக மேம்படுத்தப்பட்ட வடிவில் தட்டச்ச வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய போட்டோஷொப்பின் பீட்டா வடிவத்தை அடோப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வத் தளத்தில் இலவசமாகத் தரவிறக்கி பரிசோதனைக் காலம் நிறைவடையும் வரை பயன்படுத்தலாம்.

மூன்று முடிச்சு மெகா தொடர்


நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை சித்தரிக்கும் தொடராக “மூன்று முடிச்சு” வெளியாகிறது.
இத்தொடரில் நாயகியாக வரும் சீமா, கட்டுப்பாடான ஒழுக்கம், எதிர் காலத்தில் கணவன் வீட்டில் அடங்கி வாழ வேண்டிய போதனை இவற்றுடன் வாழ்கிறாள்.அவள் தந்தையையும் தந்தை, தன் மகளையும் உயிருக்குயிராய் நேசிக்கின்றனர்.
இந்நிலையில் வீட்டில் சீமாவுக்கும் பிரேமுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வீட்டிற்குத் தெரியாமல் ஆடல் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு சுற்றாக முன்னேறிக் கொண்டிருக்கும் சீமாவுக்கு வெற்றி இன்னும் சில சுற்றுகளில் காத்திருக்க, வீட்டிற்குத் தெரியாமல் எவ்வளவு நாளைக்குத்தான் மறைப்பது என்கிற தவிப்பில் சீமாவும், சீமா ஆடினால் நிச்சயம் வெற்றிபெறுவார் அத்துடன் தங்களது நிகழ்ச்சி நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடையும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு பக்கம் சீமாவைத் துரத்த, ஒரு சாதனையாளர் நம் வீட்டில் உருவாவது தெரியாமலே சீமாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அவரது பெற்றோர் நிராகரிக்கின்றனர்.
சீமா என்ன செய்யப்போகிறார். போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றிபெறப்போகிறாரா? அல்லது குடும்பத்தினருக்குப் பயந்து இதுவரை பெற்ற வெற்றிகளையும் தியாகம் செய்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் ஐக்கியமாகப்போகிறாரா? என்பது தான் இந்த வார விறுவிறுப்பான தொடர் ஆகும்.
வாழ்க்கையில் அவளது கனவுகளுக்கும் கட்டுப்பாடான வளர்ப்பு முறைக்கும் இடையே அவள் எதிர்கொள்ளும் சவால்களுடன் சுவையான திருப்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது மூன்று முடிச்சு.
பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வரை வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகிறது.

சனி, 27 ஆகஸ்ட், 2011

ஜோக்ஸ்


ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்..” ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்..” என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்.”
அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.
பாதிரியார் பெருமையுடன், “என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்” என்றார்.
அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, “அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?” என பாடின.
தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு” என்றது உற்சாகத்துடன்..!!!!

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

தவிக்கும் இதயம்..!

வானம் - சில மின்னும் நட்சத்திரங்களும் பின் விளைவாக சில சிந்தனைகளும் ...

 


வானம் கிரிஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம். கடந்த வருடம் தெலுங்கில் வெற்றிப்படமாக ஓடிய வேதம் என்ற படத்தின் மறுபதிவே இந்த வானம். ஐந்து குறுங்கதைகளை குழப்பமும் தொய்வும் இல்லாத கலவையாக தந்திருக்கும் வித்தியாசமான முயற்சிக்காகவே இந்த திரைப்படத்தினை பாராட்டியாக வேண்டும்.

அறிமுக காட்சிகளில் சிம்பு நகைச்சுவை ததும்ப நடித்திருக்கிறார். சந்தானமும் இரட்டை அர்த்தம் தராத நல்ல நகைச்சுவையை தந்திருக்கிறார். பரத் நடிப்பும் கொஞ்சம் தேவலை ரகம் தான். ஆனால் பரத்தின் தோழியாக நடித்திருப்பவர் தமிழை ஏன் விஸ்கி அடித்து விட்டு பேசுவது போல பேசி இருக்கிறார் என்று தெரியவில்லை. சிம்புவும் தன் தோழியிடம் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலேயே பேசுகிறார். அப்படி தமிழை கொலை செய்து பேசினால் தான் உயர் தட்டு மக்கள் என்ற காட்டுவதிலிருந்து இந்த தமிழ் திரைப்படங்கள் எப்போது தப்பிக்குமென்றே தெரியவில்லை.

சரண்யாவும் வழக்கம் போல அருமையான நடிப்பினை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். அனுஷ்காவின் கதாபத்திரம் நீக்கி இருந்தாலும் இந்த படத்தில் அதிக வித்தியாசமும் இருந்திருக்காது. ஆனால் அனுஷ்கா பொதுப்படையாக தெய்வ பெண்ணாக வந்தாலும் பாலியல் தொழில் செய்பவராக வந்தாலும் கச்சிதமாக பொருந்தும் முகவட்டோடு இருக்கிறார். பிரகாஷ்ராஜ்க்கு மிக முக்கிய கதாபாத்திரம் இந்த படத்தினில்.

யுவன் சங்கரின் இசை ரசிக்கும் படி இருக்கிறது. சிம்புவின் குரலில் எவண்டி உன்னை பெத்தான் பெத்தான் பாடல் கூடவே நம்மை பாட வைக்கிறது. சிறு சிறு தொடல்களாக நாட்டின் பல முக்கிய பிரச்சனைகளை அசால்ட்டாக கையாண்டு இருக்கின்றார்கள். மக்களுக்கிடையிலிலான உட்பூசல்கள் எல்லாவற்றிக்கும் மொழி, மதம், பணம் பேதம் போன்றவையே காரணம் என்று பல முக்கிய கனமான கதைகளைக்குக்கான கருவினை போகிற போக்கில் சொல்லி போயிருக்கிறார்கள். தனித்தனியாக சொல்லி இருக்கும் ஐந்து கதைகளையும் இறுதியாக இணைப்பது மனிதநேயம். இந்தப் படத்தின் மிக பெரிய பலமாகும்.

முகமதியர் நடத்தும் புனிதபோருக்கு தீவிரவாதம் என்ற பெயரை தந்து எந்த மூஸ்லீமை பார்த்தாலும் ஏதோ அவர்கள் தீவிரவாதம் செய்யவே பிறவி எடுத்தனர் என்ற பொதுப்படையான எண்ணத்தை வளர்த்து கொள்வது தவறென்று சொல்லும் முயற்சியையும், அவர்களிலும் அப்பாவிகள் உண்டென்பதையும் அவர்கள் பிற மதத்தினரால் முக்கியமாக இந்துவாவின் மேல் தீவிரம் காட்டுவோரால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கான நியாயம் எளிதாக மறுக்கப்படுகிறது என்று உணர்ந்த்தும் முயற்சியையும் இந்த படத்தின் மூலம் முன் வைத்திருக்கினர்கள். அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கினர். பல மதத்தினை சார்ந்தவர்களை காப்பாற்ற சில முஸ்லீம்கள் கூடி குரான் ஓதும் காட்சி உச்சக்கட்ட மனிதநேய காட்சியாகும். அப்பாவிகளை கொடுமை செய்யும் எந்த விசயமும் தீவிரவாதம் என்று புது கருத்தினை முன் வைத்திருக்கின்றார்கள். இது தான் மிக முக்கியமாக உணரப்பட வேண்டிய விசயம்.

பணம் இது என்னவெல்லாம் செய்கிறது?

எப்படியாவது பணக்காரப் பெண்ணை காதல் திருமணம் செய்ய வேண்டுமென்று என்னவோ தில்லுமுல்லு வேலைகளை ஏன் திருட கூட தூண்டும் எண்ணமும் தருவது மேட்டுகுடிக்கும் குப்பத்திற்கும் இருக்கும் பணத்தால் ஆன வேறுபாடு தவிர வேறென்ன இருக்க முடியும். திருடனிடமும் பாலியல் தொழிலாளியிடமுமிருந்து கூட ஒரு காவல்துறை அதிகாரி பணத்தையையும் நகையையும் கொள்ளையடிக்க பணத்தின் மேலிருக்கும் ஆவலன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

வாங்கின கடனையும் கடனுக்கு இணையான வட்டியையும் திருப்பி தர மாமனார் ஒருமுறையும் மருமகள் ஒருமுறையும் தன்னுடைய கிட்னியை விற்கும் அவலத்தினும், கிட்னியை பரிவத்தனத்தில் கிடைக்கும் பணத்தில் பாதிக்கு மேல் அமுக்கிக் கொள்ள முன்பே ரூட் போடும் இடைத்தரகர், பணம் பட்டுவாடா செய்யும் போது மேலுமொரு தொகையை மேல் செலவென்று எடுத்து கொண்டு மீதியை தரும் போது பணத்தை முழுசா குடுத்துடுங்க அய்யா என்று கெஞ்சி கண்ணீர் விடும் அப்பாவி இந்திய ஏழைகளை நினைத்து கொஞ்சம் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது. வேறென்ன செய்ய முடியும் இந்த கையாலாகாத எழுத்தினை வைத்துக் கொண்டு?

சூப்பர் 8

 


லிலியான் எனும் புறநகரொன்றில் நிகழும் ரயில் விபத்தொன்றின் பின்பாக அந்த சிறிய நகரில் மர்மமான சில சம்பவங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. இச்சம்பவங்கள் அந்நகர மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைப்பவையாக அமைகின்றன. இந்த ரயில் விபத்தைக் குறித்த ஒரு ரகசியத்தை வெளியே விடாது காத்து வருகிறது ஒரு சிறார் குழு….
அமைதியான ஒரு புறநகர், சூட்டிகையான ஒரு நண்பர் குழு, துவிச்சக்கரவண்டி உலாக்கள், சிறு நகரை சல்லடை போட்டுத் தேடும் ராணுவம், இவற்றின் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு மர்மம் போன்ற அம்சங்கள் Super 8 திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், இயக்கிய அருமையான படைப்பான E.T. யிலும் காணக்கிடைக்குமெனினும் சூப்பர் 8 திரைப்படமானது அதன் பார்வையாளர்களிற்கு வழங்கிடும் திரையனுபவம் அதனின்றும் வேறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது.
சூப்பர் 8, திரைப்படத்தின் முக்கிய கவர்ச்சி அம்சங்களாக அதன் இயக்குனர் J.J. Abrams திரையில் கொணர்ந்திருக்கும் மனித உறவுகள் குறித்த மென்மையான விபரிப்பு, உற்சாகம் துள்ளும் ஒரு சிறுவர் குழு அதன் நடவடிக்கைகள், இனிமையான பின்னனிப் பாடல்களுடன் அழகாக படமாக்கப்பட்டிருக்கும் 70களின் அந்திமம் என்பவற்றைக் கூறலாம்.
மைக்கல் பே மற்றும் ரோலன்ட் எமிரிக்தனங்கள் அற்ற திரைப்படத்தின் மர்மமுடிச்சுகூட ஒரு ஆறுதல் எனலாம். ஆனால் அந்த மர்மமுடிச்சை சூப்பர் 8ன் சிறப்புக்களில் ஒன்றாக கருத இயலாதவாறே அதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறவு, நட்பு, காதல் எனும் பிரதான வீதிகளில் நகரும் கதையை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்திட அந்த மர்மமுடிச்சு இயக்குனரிற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதில் பிரம்மித்திட ஏதும் இல்லை. இயக்குனரின் பிரதான இலக்கு ரசிகர்களின் மனங்களின் ஆழத்தில் துயிலும் மென்மையான உணர்வுகளிற்கு தூண்டில் போடுவதாகவே அமைகிறது. அவரின் அத்தூண்டில் சரியாகவே வீசப்பட்டிருக்கிறது எனலாம். மாறாக மர்மமுடிச்சிற்கும் மனிதர்களிற்குமிடையில் இருக்ககூடிய உறவானது மனதை தொடும் ஒன்றாக திரைக்கதையில் உருவாக்கப்படவில்லை.
தனக்கான ஒரு இடத்தை நோக்கி திரும்பல் அல்லது வீடு செல்லல் என்பதனை திரைக்கதையின் இழைகளில் ஒன்றாக கொண்டிருக்கிறது சூப்பர் 8. திரைப்படத்தில் வரும் சிறுவன் ஜோ, சிறுமி ஆலிஸ் ஆகிய இருவரும் தம் அன்னையரை இழந்தவர்கள். ஜோவின் தாய், தொழிற்சாலை விபத்தொன்றில் பலியாகிவிடுகிறாள். ஆலிஸின் தாய் தன் குடிகாரக் கணவனுடன் வாழ விரும்பாது அவனை விட்டு விலகிச் சென்று விடுகிறாள். தாயன்பு வெறுமையான இரு வீடுகளில் வாழும் இரு சிறார்களாக இவ்விரு பாத்திரங்களும் கதையில் காட்டப்படுகிறார்கள்.
ஜோவிற்கும், ஆலிஸிற்கும் அவர்களின் தந்தைகளிற்குமிடையில் இருக்கும் புரிந்துணர்வின்மை என்பதன் அரூப சுவர்களை கொண்டதாகவே அவர்கள் வீடுகளும் அமைந்திருக்கின்றன. இச்சுவர்களுடனான மோதலே இவ்விரு சிறுவர்களையும் அச்சுவர்களிற்கு வெளியே அல்லது அச்சுவர்கள் மறையும் தருணத்தில் உற்சாகமாக இயங்க செய்கின்றன. தம்மிருவர் இடையேயும் ஒரு அந்தரங்க வெளியை உருவாக்க உந்துகின்றன.
super-8-2011-20233-1562492729இயக்குனர் ஏப்ராம்ஸ் இச்சிறார்கள் எதிர்கொள்ளும் வெறுமையான கணங்களையும், சிறுவர்களின் தந்தைகளிற்கும் சிறுவர்களிற்குமிடையில் உரையாட முடியாமல் துடிக்கும் பாசத்தையும், அக்கறையையும், இவ்விரு சிறார்களும் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் இடையில் முளைவிடும் ஈர்ப்பையும் மிகவும் அழகாக திரைப்படுத்தியிருக்கிறார்.
கனமான வெறுமை அழுத்தும் வீடுகளிலிருந்து விடுபட்டு நட்பையும், சாகசத்தையும், விருப்புடன் தேடி ஒடும் இந்த இரு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கி ஈர்க்கப்படுவது என்பது இயல்பான ஒன்றாகவே தெரிகிறது. தம் தந்தைகள் இடும் தடைகளைத் தாண்டியும் அவர்கள் தம் சந்திப்புக்களை தொடர்வதற்கு காரணம் அந்த சந்திப்பில் அவர்கள் உணரும் அன்பான ஒரு வெளியே. இந்த அன்பும் அக்கறையுமே இறுதியில் ஆலிஸை காப்பாற்றுவதற்காக ஜோவை ஓட வைக்கிறது. அதற்காக அவன் எதிர்கொள்ள வேண்டிய ஜீவன் அவன் உயிரை எடுத்துவிடலாம் என்பதை அவன் அறிந்தே தன் நண்பர்களுடன் ஆலிஸை தேடிச் செல்கிறான்.
இவ்வாறான ஒரு நண்பர் குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் குணாதிசயங்களுடன் ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் ஏப்ராம்ஸ். அவர்கள் கூடும் போதெல்லாம் உற்சாகம் அங்கு கும்மியடிக்க ஆரம்பித்து விடுகிறது. சூப்பர் 8 கமெரா ஒன்றின் உதவியுடன் குறும்படத்தை இயக்கும் சார்ல்ஸ், வெடி நிபுணன் கேரி, குறும்படத்தில் டிடெக்டிவ் பாத்திரமேற்று நடிக்கும் மார்ட்டின் என ஒவ்வொருவரும் தனி ரகமாக சிரிக்க வைக்கிறார்கள். வயதிற்கு மீறிய உரையாடல்களை நிகழ்த்தி உயிரை வாங்கும் சிறுவர்கள் நிறைந்த படைப்புக்களில் இருந்து சூப்பர் 8 வேறுபடுவது ரசிகனிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். இச்சிறார்களின் குடும்பங்கள் வழியேயும், நகரில் வாழும் மக்கள் வழியேயும் சிறிய புறநகர் சமூகமொன்றின் வேறுபட்ட மனநிலைகளையும் ஏப்ராம்ஸ் மெலிதாக காட்டியிருக்கிறார்.
திரைப்படம் நிறைவடைந்த பின்பாக சிறுவன் சார்லஸ் இயக்கிய திகில் குறும்படம் பார்வைக்கு வரும். அது அட்டகாசமான ஒரு அனுபவமாக அமையும். அதேபோல் சிறுமி ஆலிஸாக வேடமேற்றிருக்கும் Elle Fanning, சார்ல்ஸின் திரைப்பட காட்சி ஒன்றிற்கான ஒத்திகையில் தன் துணைவனான டிடெக்டிவ்வை பிரிய மறுத்து உரையாற்றுமிடத்தில் அவர் முகத்தில் வந்துவிழும் உணர்வுகளின் தொகுப்பு அசர வைக்கிறது.
இழப்புக்களின் பின்பாகவும் வாழ்க்கையை தொடர்ந்திட வேண்டியதன் அவசியத்தையும், அன்பான உறவு மற்றும் நட்பின் பெறுமதிகளையும் வலியுறுத்துவதாக சூப்பர் 8 திரைப்படத்தின் இறுதிப்பகுதி அமைந்திருக்கிறது. நெருக்கடிகள் சில வேளைகளில் உறவுகளை எதிர்பாராத வகைகளில் புதுப்பித்து தருகின்றன. கையெட்டும் தூரத்தில் இருந்த பாசத்தை எட்டியணைக்கவும், ஆரத்தழுவிடவும் செய்கின்றன. தனக்கான ஒரு கூட்டை நோக்கி திரும்பும் எந்த ஜீவனும் அங்கிருக்கும் வெறுமைக்காக வேகம் காட்டுவதில்லை. தனக்கென அங்கிருக்கும் அன்பும், பாசமுமே அதன் வீடு திரும்பலை காலகாலத்திற்கும் இனிமையான ஒரு அனுபவமாக ஆக்ககூடும். ரசிகர்களின் மனதில் ஏக்கம் சுற்றிப் புதைத்திருந்த ஒரு ரகசியமான வீடு திரும்பலை மீண்டும் மேற்பரப்புகளிற்கு இட்டு வருவதிலும், அவர்கள் தம் பால்யகால நினைவுகளை மீண்டும் அசைபோட வைப்பதிலும் சூப்பர் 8 சுபமாக வீடு திரும்பியிருக்கிறது.

சீசரின் வீடு ...........

 


மூளையின் சிதைவுற்ற திசுக்களை மீளுற்பத்தி செய்யும் ஆய்வுகளை வாலில்லா குரங்குகளில் மேற்கொண்டு வருகிறான் விஞ்ஞானியான வில். அவன் ஆய்வுகள் சாதகமான முடிவுகளை வழங்கும் நிலையை எட்டும்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வாலில்லாக் குரங்கு ஒன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதனால் அக்குரங்கு சுட்டுக் கொல்லப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு ஈன்ற குட்டியை ஆய்வுகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்து வந்து தன் வீட்டில் பராமரிக்க ஆரம்பிக்கிறான் வில். சீசர் எனப் பெயரிடப்பட்ட அந்த வாலில்லாக் குரங்கின் மூளைச் செயற்பாடுகள் வில்லை வியப்பிற்குள்ளாக்கும் எல்லைகளை தொட்டு நிற்கின்றன…..
பிரெஞ்சு அறிபுனைக் கதாசரியரான Pierre Boulle அவர்கள் 1963ல் படைத்த La Planete Des Singes எனும் நாவலைத் தழுவி அதன் சினிமா, தொலைக்காட்சி, காமிக்ஸ் வடிவங்கள் உருவாகி இருக்கின்றன. பீய்ர் வூல் கற்பனை செய்த, மனிதர்களை அவர்களின் பரிணாம அதிகார மற்றும் அறிவடுக்குகளிலிருந்து கீழிறக்கி விட்டு குரங்குகள் ஆதிக்கம் செய்யும் உலகொன்று தோன்றுவதற்கு காரணமான ஆரம்பங்களை முன்வைப்பதாகவே இயக்குனர் Rupert Wyatt வழங்கியிருக்கும் Rise of the Planete of the Apes திரைப்படம் அமைகிறது.
புரட்சியையோ எழுச்சியையோ ஒரு விதைக்கு ஒப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில் எதிர்காலமொன்றில் மனிதர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து பூமியில் விழும் விதையாக சீசர் எனும் சிம்பன்ஸி உருவாக்கப்பட்டிருக்கிறது. சீசர் எனும் அவ்விதைக்கு நீருற்றி வளர்த்ததில் மரபணுவியல் விஞ்ஞானத்திற்கும், தனக்கு கீழான விலங்குகள் என மனிதன் கருதும் ஜீவன்கள்மீது அவன் நிகழ்த்தும் அடக்குமுறையுடன் கூடிய வன்முறைக்கும் முக்கிய பங்கிருக்கிறது. பீர் வூலின் நாவலில் குரங்குகள் என்பது மனிதனின் மனதில் வாழும் மிருகத்தனமான உணர்ச்சிகளை குறிப்பதாகவும், அடக்குமுறை, வன்முறை, இன நிற துவேஷம் என்பன அவனை மனிதன் எனும் ஸ்தானத்திலிருந்து துரத்தி பரிணாம ஏணியில் அவன் மிருக குணங்கள் ஆதிக்கம் பெறுவதை உணர்த்துவதாகவும் அமைந்தது.
ரூப்பர்ட் வைய்யேட்டின் இயக்கத்தில் குரங்குகளின் எழுச்சியைவிட அவை மனிதனுடன் கொண்டிருக்கும் உறவே பிராதனப்படுத்தப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பரிசோதனக்காகவும், மிருககாட்சி சாலைகளில் காட்சிப் பொருளாகவும், சர்க்கஸுகளில் வித்தை காட்டும் மிருகமாகவும் சித்தரிக்கப்படும் குரங்குகள் சில வேளைகளில் மனிதர்களின் இல்லங்களில் செல்லப்பிராணிகளாகவும் இடம் பிடித்துக் கொள்கின்றன. அவ்வகையான வாய்ப்பு பெற்ற சீசரிற்கும் அவனை தன் வீட்டில் பராமரிக்கும் வில்லிற்கும், அல்ஸெய்மர் நோயால் பாதிக்கப்பட்ட வில்லின் தந்தை சார்ல்ஸிற்கும் இடையில் உருவாகும் பாசம் மிகுந்த உறவு படத்தின் பலம் வாய்ந்த அம்சமாகும்.
rise-of-the-planet-of-the-apes-2011-20170-634715338rise-of-the-planet-of-the-apes-2011-20170-153087889சிறு குட்டியாக வில்லின் வீடு வந்து சேரும் சீசர் அங்கு படிப்படியாக வளர்வதும், தன் தாய் வழியாக அவன் மரபணுவில் கடத்தப்பட்ட அலகுகள் வழி அவன் மூளை அறிவு விருத்தியில் வியக்கதகு எல்லைகளை தொடுவதும் ஒரு சிறு குழந்தையின் குறும்புகளை ரசிக்க வைக்கும் விதத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானி வில் இங்கு நோயால் பீதிக்கப்பட்ட தன் தந்தைக்கும், சீசரிற்கும் ஒரு தந்தையாக ஆகி விடுகிறான். மனதை தொட வைக்கும் காட்சிகளால் திரைப்படத்தின் இப்பகுதி ரசிகர் மனதை தொட்டுக் கொண்டே இருக்கிறது. சீசரின் அரவணைப்பும், அவன் தொடுதல்களும் பாசத்தின் நீட்சிகளாக மனதில் படர்கின்றன. சீசர் பாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக ஆக்கிரமிப்பது வில்லின் வீட்டில்தான்.
சீசர், வில்லையும், அவன் தந்தையும் தன் குடும்பமாக நினைத்துக் கொள்கிறான். அவன் தான் ஒரு சாதாரண வளர்ப்பு பிராணி அல்ல என்றே கருதுகிறான். இதனால்தான் தன் கழுத்துப் பட்டியை கழட்டி விட்டு வில்லின் காரில் பயணிகள் இருக்கையில் அவன் வந்து அமர்ந்து கொள்கிறான். வில்லின் தந்தைக்கு துன்பம் தரும் அயலவனையும் சீசர் தாக்குவது அவர்கள் தன் குடும்பம் எனும் எண்ணத்தினாலே ஒழிய வளர்ப்பு பிராணி காவலன் எனும் ஸ்தானத்தினால் அல்ல. தான் குடும்பத்தில் ஒருவன் என்பதை சீசர் நிரூபிக்கும் காட்சிகள் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் சீசர் அவன் வீட்டிற்குள்ளேயே இருக்க பணிக்கப்பட்டிருக்கிறான். சாளரம் ஒன்றின் வழியே அவன் வெளியுலகை, பரந்த உலகை எண்ணி ஏங்குவது உணர்த்தப்படுகிறது. வீடு ஒரு சிறை ஆனால் அன்பு நிறைந்த சிறை. பரந்த வெளியில் விருட்சங்களினூடாக தாவிப் பாயும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சீசர் தன்னை விடுவித்துக் கொள்கிறான். விருட்சங்களும், சுவர்கள் அற்ற வெளிகளும் அவனிற்கு பிடித்திருக்கின்றன. சாளரம் என்பது சீசரிற்கு அன்பான சிறையின் அடையாளம். அதனால்தான் தான் அடைக்கபபடும் கூண்டின் சுவரில் அவன் அன்பை வரைந்து கொள்கிறான். அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையின் கெடுபிடிகள் என்பவற்றின் நத்தை வேக நகரல் அவனிற்கு தன் இனத்தின் மீது மனிதன் காட்டி வரும் குரூரத்தை காட்டி விடுகிறது, தன் இனத்திற்கிடையில் நிலவும் வன்முறையின் பிடியை அனுபவிக்க செய்கிறது, தன் இனத்தை இதே நிலையில் தொடர்ந்தும் நீடிக்க விடக்கூடாது எனும் தீர்மானத்திற்கு சீசரை இட்டு வருகிறது. நம்பிக்கை ஒன்றின் முறிதலும், அவன் மனதில் எழும் சுதந்திர கனவும் அவனை தான் அடைபட்ட கூட்டில் அவன் வரைந்த சாளரத்தை அழிக்க செய்கின்றன. தமக்குரித்தான வீட்டை தாம் தேடிச் செல்ல வேண்டும் என்பதை அவனிற்கு உணர்த்திவிடுகின்றன. மனிதகுலத்துடன் இணைந்து வாழ்தல் என்பது தம் இயல்பிற்கு மாறானது என்பதை சீசர் உணர்வதுதான் எழுச்சியின் முதல் முளை.
la-planete-des-singes-les-origines-2011-20170-807017264சீசர் எனும் குரங்கு Motion Capture எனும் நுட்பத்தால் உருவாக்கப்பட்டாலும் அக்குரங்கின் நடிப்பிற்கு மூலமாக இருந்தவர் நடிகர் Andy Serkis. இணையத்தில் அவர் நடிப்பு எவ்வகையாக சீசராக பரிமாணம் பெற்றது என்பதை நீங்கள் பார்க்க முடியும். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். திரைப்படத்தின் சிறந்த நடிகர் ஆண்டி செர்கிஸ் எனும் சீசர்தான் என்பதில் ஐயமே இல்லை. அதே போல் நவீன தொழில் நுட்பத்தின் வழி உருவாக்கப்பட்டிருக்கும் குரங்குகள், அவைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் யாவும் வியக்க வைக்கின்றன. குரங்குகளை அடைத்து வைக்கும் நிலையத்தில் குரங்குகளினிடையே நிகழும் சம்பவங்கள் நல்ல ஆய்வின் பின்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. பபூனிற்கும் சீசரிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவை கலந்து உருவாக்கபபட்டிருக்கின்றன.
திரைப்படத்தின் இறுதிப் பகுதியான குரங்குகளின் எழுச்சி, பரபரபிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னை அக்காட்சிகள் பெரிதும் கவரவில்லை. ஆய்வுகூட அழிப்பு, வன்முறை என்பன திரைப்படத்தை வழமையான வசந்த வசூல் அள்ளி சூத்திரத்தினுள் தள்ளி விடுபவையாக அமைகின்றன. இவ்வளவு சிறிய இடைவெளியில் இவ்வகையான ஒரு சிறையுடைப்பை குரங்குகள் ஒருங்கமைக்க முடியுமா எனும் கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும் மிக மென்மையான மனித உணர்வுகளை தழுவியணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் படத்தின் முன்னைய பகுதிகள் இத்திரைப்படத்தை ஒரு நல்ல அனுபவமாக மாற்றி அடிக்கின்றன. மனிதகுலத்தின் அழிவு மனிதனாலேயே என்பதாக படம் நிறைவு பெறுகிறது. ஆனால் சீசர் தன் இனத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி விடுகிறான். அழியப்போகும் மனிதகுலத்தை உயர்ந்த விருட்சமொன்றின் உச்சத்தில் நின்றவாறே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தன்னை கொல்ல வருபனையும் கொல்லத் தயங்கும் அவன் கண்கள் எம் கண்களுடன் இணைந்து கொள்கின்றன.

அழகர்சாமியின் குதிரை




முதலிலேயே சொல்லி விடுகிறேன்.”அழகர்சாமியின் குதிரை” கதையை நாயகனாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான முயற்சி.இந்த அழகான முயற்சியை விமர்சித்து நார் நாராகக் கிழிப்பது எனது நோக்கமல்ல.படம் குறித்த எனது புரிதல்களின் பகிர்தல்களே இந்தப் பதிவு.

வெண்ணிலா கபடிக்குழு போலவே திருவிழாவோடு துவங்குகிறது படம்.தேனி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தின் தெய்வமாகிய அழகர்சாமியின் திருவிழாவை நடத்த முடியாமல் தவிக்கிறது ஊர்.”எப்படியாவது திருவிழாவை நடத்தி விடுங்கள்...அப்போது தான் ஊரில் மழை பெய்யும்” என்று ஊர் கோடாங்கி சாமி வந்து (வராமல்)சொல்லிவிட, ஊரும் பகீரத முயற்சி எடுக்கும் வேளையில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போகிறது.என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அப்புக்குட்டியின் குதிரை ஊருக்கு வந்து சேர்கிறது. அதன் பின் திருவிழா நடந்ததா???அப்புக்குட்டிக்கு குதிரை கிடைத்ததா???மழை வந்ததா??? என்பதே இரண்டாம் பகுதி.

படத்தின் முதல் பகுதி முழுதும் இழையோடும் இயல்பான நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம். அதுவே இரண்டாம் பகுதியில் அந்த நகைச்சுவை இல்லாத போது ஜீரணிக்கவே முடியவில்லை.

”படத்தின் காலகட்டத்தை 1982 என அமைத்தது”, ”பல இடங்களில் மூட நம்பிக்கையை சாடியுள்ளது”,கதைக் களத்தையும், கதை மாந்தர்களையும் நம் மனதில் பதிய வைத்தது” என சுசீந்திரன் படத்தில் பல விடயங்களை அநாயசமாக செய்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள அத்துணை நடிகர்களும் குறிப்பிடத்தகுந்தவர்களே.

பாஸ்கர்சக்தியின் இயல்பான கதை, வசனம் படத்தின் மிகப் பெரிய பலம்.

தேனி ஈஸ்வர் தேனியை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குதிரைக்குட்டி பாடலில் இளையராஜாவின் குரல் அட்டகாசம். ஆனால் மற்ற பாடல்களிலும், பின்னணி இசையிலும் வழக்கம் போலவே ஏமாற்றிவிட்டார்.”வெண்ணிலா கபடிக்குழு படத்தின் ”லேசா பறக்குது மனசு” என்ற பாடலுக்கு ஈடாக படத்தில் ஒரு பாடலும் இல்லை. இத்தனைக்கும் படத்தில் ஒரு தனி லவ் ட்ராக்கும் இருக்கிறது.

இடைவேளை வரை மேலே மேலே போகும் படம், இடைவேளைக்குப் பிறகு கீழே, கீழே இறங்குகிறது.

அப்புக்குட்டியின் பெண் பார்க்கும் படலம் + காதல், குதிரை போய் கெட்டவர்களையெல்லாம் அழிப்பது என இரண்டாம் பாதியில் நாடகமாக்கமாகி விட்டது.

படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, நாடகமாக்கலையும் தவிர்த்திருந்தால் தமிழ்சினிமாவின் மைல்கல் சினிமாக்களில் ஒன்றாக இருந்திருக்கும் அழகர்சாமியின் குதிரை.

ஒரு சாலை வழிப் பயணம்(நந்தலாலா), ஒரு காட்டு வழிப் பயணம்(மைனா)


சமீபத்தில் என் மனதை பாதித்த இரண்டு திரைப்படங்கள் - நந்தலாலா மற்றும் மைனா.   இந்த இரு திரைப்படங்களின் கதை களமும் ஒன்றுதான்  -  நெடுந்தூரப் பயணம்.

ஒரு பயணத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.  கதாநாயகனும் கதாநாயகியும் சந்தர்ப்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக சேர்ந்து பயணிக்க நேரிடுவது,  பின் அது காதலில் முடிவது போன்ற திரைப்படங்களை பார்த்து அலுத்துவிட்டது.  'டைடானிக்' (கப்பல் பயணம்), மெட்ராஸ் டு பாண்டிச்சேரி (பேருந்து பயணம்), An Affair to Remember (கப்பல் பயணம்) - இது போன்ற திரைப் பயணங்கள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தன.

ஆனால்  ஒரு சிறுவன், ஒரு மனநோயாளி மற்றும் ஒரு விலைமாது (நந்தலாலா) சேர்ந்து செல்லும் ஒரு பயணத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?  அந்த மூவரையும் எப்படி இணைக்க முடியும்?     அதேபோல் மைனாவில் ஒரு குற்றவாளி, அவனது காதலி, இரண்டு காவல் துறை அதிகாரிகள் சேர்ந்து மலையடிப் பாதைகளில் நடந்து செல்கிறார்கள்.  இந்தப் பயணம் எப்படி சுவையானதாக இருக்கமுடியும்?

இருந்தது!  அந்தப் பயணங்கள் சுவையானதாக மட்டுமல்லாமல்,  என் மனதை நெருடி கண்களில் கண்ணீரையும் வரவழைத்தன.


நந்தலாலா: அகிலேஷ் என்கிற சிறுவனும் பாஸ்கர் மணி என்கிற மனநோயாளியும் எதிர்பாராத விதமாக சேர்ந்து பயணம் செல்ல நேர்கிறது.  பயணிக்கும் திசை ஒன்றாக இருக்கிறது...நோக்கம் கூட ஒன்றுதான்...இருவருமே தத்தம் தாயைச் சந்திக்கச் செல்கிறார்கள்.  ஆனால் சந்தித்த பின் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் வேறுபடுகிறார்கள்.  அகிலேஷ் தன் தாயின் கண்ணத்தில் முத்தமிட விரும்புகிறான்.  பாஸ்கர் மணி தன் தாயின் கண்ணத்தில் அறைய விரும்புகிறான்.  ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் நடந்ததோ வேறு.  பாஸ்கர் அகிலேஷின் தாயின் கண்ணத்தில் அறைகிறான்.   அகிலேஷோ ஒரு விலைமாதுவை தாயாக ஏற்று அவள் கண்ணத்தில் முத்தமிடுகிறான்.  ஏன் என்று குழப்பமாக இருக்கிறது இல்லையா? விடையை வெள்ளித் திரையில் காண்க!

நாம எல்லாருமே அன்புக்காக ஏங்குகிறோம்.  நாம் எதிர்பார்க்கும் இடத்தில் அன்பு கிடைக்கவில்லையென்றால், அது கிடைக்கும் இடத்தில் இருந்து ஏன் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது?  அல்லது அன்புக்காக ஏங்கும் மற்றொருவரின் மேல் நாம் ஏன் அன்பு செலுத்தக்கூடாது? இது சிறுவன் அகிலேஷ் கற்றுக்கொண்டு, நமக்கும் கற்றுக்கொடுக்கும் பாடம்.  தன் தாய் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாள் என்பதை உணர்ந்தபின், போக்கிடம் இல்லாமல், வேறு பிழைப்பு இல்லாமல் தன் பயணத்தில் தன்னுடன் இணைந்த விலை மாதுவை தன் தாயாக ஏற்கிறான்.  கொஞ்சம் இது 'ஓவர் டிராமா' போல் இருந்தாலும், ஒரு சிறுவனுக்குள்ள உயர்ந்த எண்ணத்தை,  பரந்த மனப்பாண்மையை படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மிஷ்கின்னை பாராட்டியே ஆகவேண்டும்.

"ஒன்னுக் கொன்னு துணையிருக்கும் உலகத்தில...
அன்பு ஒன்னு தான் அனாதையா...
யாரு இத கண்டுகொள்வார்...
கைகளிலே ஏந்திக்கொள்வார்...
சொந்தம் சொல்ல யார் வருவார்...
அன்புக்கு யார் அன்பு செய்வார்..."

என்னமாய் பாடிவிட்டர் ஜேசுதாஸ்?

 பாடல் வரிகள் மனதைத் தொடுகின்றன.  அன்பு கிடைக்காமல் இருப்பவர்களைத் தான் அனாதை என்கிறோம்.  ஆனால் அன்பே அனாதையா இருக்கிறதென்று சொல்லும் போது, அதன் பின்னணயில் இருக்கும் வலியும் கொடூரமும் புலப்படுகிறது.

எனக்குத் தோன்றிய சில குறைகள்: 1. மிஷ்கின் அதிவேகமாகப் பேசுவதால், அவரது வசனங்கள் சரியாகப் புரியவில்லை 2. அடிக்கடி மிஷ்கின்னும், அகிலேஷும் தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு சாலையில் நிற்பது பார்க்க அலுப்பாக இருக்கிறது.  3 விலைமாதுவாக வருபவர் ஏன் மற்ற இருவருடன் இணைந்து பயணிக்கிறார் என்பதற்கு வலுவான ஒரு காரணம் எனக்குப் புலப்படவில்லை.

மைனா:  நந்தலாலா கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறதென்றால்  மைனா தேணி, முன்னார் அருகில் உள்ள மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் பயணிக்கிறது.

தீபாவளியன்று நடக்கும் கதை என்பதால், பின்னணியில் வெடிச் சத்தம்,  குழந்தைகள் இனிப்பு எடுத்துச் செல்வது போன்றவை யதார்த்தமாக இருந்தது.  மசாலா படங்களில் மிடுக்காக சைரன் வைத்த ஜீப்புகளில் செல்லும் காவல் அதிகார்களையே பார்த்துப் பழகிவிட்டோம் நாம்.  இயல்பாக சைக்கிளிலும் ஆட்டோவிலும் செல்லும் சிறைக் காவல் அதிகார்களைப் பார்க்க நன்றாக இருக்கிறது.  அதிகாரி ராமய்யா நடிப்பில் அசத்திவிட்டார்.  அவருடை மனைவி செல் பேசியில் அழைக்கும் போது, "மாமோய்...நீ எங்க இருக்க?" என்று அலறும் அவருடைய  ரிங் டோன் சூப்பர்!  வடிவேலும், விவேக்கும் ரூம் போட்டு யோசித்துச் செய்யும் காமெடியை ராமய்யா மிக இயல்பாக இரசிக்கும்படியாகச் செய்துவிட்டார்.

படத்தின் தொடக்கத்தில் தங்கையின் மேல் அன்பைப் பொழிந்து, பாஸ்கர் என்கிற சிறைக் காவல் அதிகாரியான மச்சானின் மேல் சற்று காண்டாக இருக்கும் அந்த மூன்று முரட்டு அண்ணன்களைப் பார்த்தாலே வயிற்றில் புலியைக் கரைத்தது.  ஏன் தொடக்கத்தில் அந்த அண்ணன் தங்கை தொசைபேசி உரையாடலை அவ்வளவு விலாவரியாகக்  காட்டுகிறார்கள் என்று நான் யோசித்தேன்.  ஆனால் படத்தின் முடிவில் நம் நெஞ்சை பதைக்க வைக்கும் ஒரு பாதகச் செயலுடன் அந்த ஆரம்ப நிகழ்ச்சிகளை அருமையாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு பக்கம் அந்த அமைதியான சிறைக்காவல் அதிகாரி பாஸ்கர்,  அவருடைய திமிர் பிடித்த மனைவி, அவளுடைய முரட்டு அண்ணன்மார்.  இவர்களுக்குத் தொடர்பே  இல்லாமல் சற்றுத் தள்ளி ஒரு மலை கிராமத்தில்  உயிருக்குயிராக நேசிக்கும் சுருளியும் மைனாவும்.  சிறு வயதிலிருந்தே தன் காதலி மைனாவுக்கு வீடு கொடுத்து, வசதி கொடுத்து, படிக்க வைத்து, அவளை வளர்க்க அவளது தாய்க்குச் சமமாக எல்லாவற்றையும் செய்கிறான் சுருளி.  அவளைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதே அவனது கனவு.  அப்படி அவன் கண்ணும் கருத்துமாக பல ஆபத்துகளில் இருந்து காத்து வளர்த்த மைனாவை யாரோ அவர்களுக்குச் சம்மந்தமே இல்லாத மூன்று நபர்கள் (அந்த முரட்டு அண்ணன்கள்) அனியாயமாகக் கொன்று விடுகிறார்கள்.  அதைத் தாங்கமுடியாமல் சுருளி ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான்.

ஏன் அந்த மூன்று அண்ணன்களும் மைனாவை கொலை செய்கிறார்கள் என்பதை வெள்ளித் திரையில் காண்க!  இன்னேரம் கண்டிருப்பீர்கள் :-)

 சுருளி வாழும் அந்த மலைக் கிராமத்திற்குச் சென்று சிறை அதிகாரிகள் பாஸ்கரும் ராமைய்யாவும் சுருளியை பிடித்துக்கொண்டு வரும்போது, மைனாவும் அவனுடன் வருகிறாள்.  அவர்கள் நால்வரும் தேணிக்கு திரும்பி வரும் பயணத்தின் போது அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் அழகான திரைக் கதையாக விரிகிறது.  மைனாவும் சுருளியும் ஒரு ஆப்பக் கடை வைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக முன்னேறிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்.  அந்தச் சிறை அதிகாரிகளோ, தீபாவளி அன்று தம் குடுமபத்தாருடன் இருக்க முடியவில்லையே என்று அவர்கள்  மீது கடுப்பாக இருக்கிறார்கள்.  ஊருக்குப் போனவுடன் அவனை கஞ்சா வழக்கில் வெளியே வரமுடியாதபடி சிறையில் தள்ள திட்டமிடுகிறார்கள்.   இப்படி, அடுத்த என்ன நேரப் போகிறதோ, என்று நம் மனமும் அவர்களை படபடப்புடன் பின் தொடர்கிறது.  இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

இன்னும் இறந்து போன மைனாவை நினைத்தால் மனசு கஷ்டமா இருக்கு.  அதுவும், அவளை துன்புறுத்திக் கொல்லும் போது, அவள் அந்த அண்ணன்களின் காலைப் பிடித்து ஏதோ சொல்லத் துடிப்பாளே, அய்யோ....என்ன கொடுமை?!  வழக்கமாக சுருளி தானே அந்த வில்லன்களைப் பழிவாங்க வேண்டும்?  ஆனால் அவன் தற்கொலை செய்துகொள்ள, சிறை அதிகாரி பாஸ்க ரே தன் மச்சான்களையும் மனைவியையும் வெட்டிச் சாய்க்கிறார்.  நன்றாக வேண்டும் என்று என் மனமும் குரூரமாகச் சந்தோசப்பட்டது!!!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

HELLO ISD பெண்ணே


HELLO ISD பெண்ணே  

ஹலோ 
அன்பே 
உந்தன் ISD 
வாழ்க்கைக்கு 
என் LOCAL BUDJECT 
செல்லாது , 
என் NUMBER யும் 
தொடர்பு கொண்டதற்கு 
நன்றி

செல்போன் காதல்



அன்பே 
நீ ஒரு 
ஒரு செல்போன் 
ஆமாம் 
என் பாக்கெட்டில் balance 
உள்ளவரை மட்டுமே 
நீ என்னோடு பேசுவாய் ! 

The Boss :- Anushman Slideshow

The Boss :- Anushman Slideshow: TripAdvisor™ TripWow ★ The Boss :- Anushman Slideshow ★ to Jaffna. Stunning free travel slideshows on TripAdvisor

செவ்வாய், 10 மே, 2011

விடியல்



இசையின் குருகள் ஆன குயில்கள்
இன்னிசை கச்சேரி நிகழ்த்த
ஓங்கி வளர்ந்து ஒய்யாரமாய் நிற்கும் மரங்கள்
தன் ஆயிரம் கைகளை அழகாய் வீச
பனியிடம் குளிரையும் பூவிடம் மணத்தையும்
கடனாய் வாங்கி
புயல் எனும் கோபத்தை தவிர்த்து
காற்று தென்றலாய் வீச
காலை கதிரவன் தன் கதிரை
கைகளாக விரிக்க
புற்கள் தன் மீது படர்ந்த பனித்துளிகளை
சிறு புதையல் என மறைக்க
அழகின் சிகரமாக மாறப்போகிறோம்
என கர்வம் கொண்ட மொட்டுகள்
பூவாய் மலர
வெள்ளை நரை தலையை கொண்ட ஓடைகள்
புது மெட்டுகளுடன் ஒலியை எழுப்ப
அழகின் வண்ணமாம் கருமை நிறத்தை
தனக்கே உரியதாய் கொண்ட காகம்
தன் இனிய குரலில் சங்கீதம் பாட
வட்ட கிண்ணத்தில் பதித்த முத்துக்கள் போல
மின்னும் அழகியான நிலவு
தன் காதலன் வருகைக்காக காத்திருக்க
அம்மாவின் நெற்றி பொட்டைப் போல
தன் முகத்தை சாந்தமாய் கொண்டு
தன் காதலி நிலவை சூரியன் பார்க்க
என் மகன் வந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில்
கீழ்வானம் அழகாய் சிவக்க
இதோ விடிகிறது விடியல்

Mothers Day 2011


கார்முகிலைக் கிழித்துக்
கொட்டும் மழை நீ
சிறுதுளி நான்!
மடையுடைத்துப் பெருகும்
காட்டாற்று வெள்ளம் நீ
சிறு ஓடம் நான்!
ஆழம் அகலமறிந்திடா
ஆழ்கடல் நீ
சிறு அலை நான்!
கண்ணிலும் கருத்திலும்
அடங்கா அண்டம் நீ
சிறு அணு நான்!
விரவிப் பரவும் இனிய
நறுமணம் நீ
சிறு மல்லிகை நான்!
கவிஞர்கள் வேண்டி நிற்கும்
கற்பனை நீ
சிறு கவிதை நான்!
அமரர் கடைந்தெடுத்த
அமுதம் நீ
தேன்துளி நான்!
அமுதினும் இனிய
தமிழ் நீ
உயிரெழுத்து நான்!
பிரம்மமாய் சக்தியாய்
ஆதியாயான தாய் நீ
உன் சேய் நான்!
கொட்டும் மழை நீ
சிறுதுளி நான்!
மடையுடைத்துப் பெருகும்
காட்டாற்று வெள்ளம் நீ
சிறு ஓடம் நான்!
ஆழம் அகலமறிந்திடா
ஆழ்கடல் நீ
சிறு அலை நான்!
கண்ணிலும் கருத்திலும்
அடங்கா அண்டம் நீ
சிறு அணு நான்!
விரவிப் பரவும் இனிய
நறுமணம் நீ
சிறு மல்லிகை நான்!
கவிஞர்கள் வேண்டி நிற்கும்
கற்பனை நீ
சிறு கவிதை நான்!
அமரர் கடைந்தெடுத்த
அமுதம் நீ
தேன்துளி நான்!
அமுதினும் இனிய
தமிழ் நீ
உயிரெழுத்து நான்!
பிரம்மமாய் சக்தியாய்
ஆதியாயான தாய் நீ
உன் சேய் நான்!
கொட்டும் மழை நீ
சிறுதுளி நான்!
மடையுடைத்துப் பெருகும்
காட்டாற்று வெள்ளம் நீ
சிறு ஓடம் நான்!
ஆழம் அகலமறிந்திடா
ஆழ்கடல் நீ
சிறு அலை நான்!
கண்ணிலும் கருத்திலும்
அடங்கா அண்டம் நீ
சிறு அணு நான்!
விரவிப் பரவும் இனிய
நறுமணம் நீ
சிறு மல்லிகை நான்!
கவிஞர்கள் வேண்டி நிற்கும்
கற்பனை நீ
சிறு கவிதை நான்!
அமரர் கடைந்தெடுத்த
அமுதம் நீ
தேன்துளி நான்!
அமுதினும் இனிய
தமிழ் நீ
உயிரெழுத்து நான்!
பிரம்மமாய் சக்தியாய்
ஆதியாயான தாய் நீ
உன் சேய் நான்!
 

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

இலங்கை



1996 உலகக்  கிண்ண போட்டிகள் ஆரம்பிக்கும் வரை இலங்கை கிரிக்கட் அணி ஒரு போட்டியை வென்றால் அது எதிரணியின் அதிர்ச்சி தோல்வியாகவே கணிக்கப்பட்டது, 1996 உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒரு போட்டியில் தோற்றால் அதை 'இலங்கை அதிர்ச்சி தோல்வி' என்று சொல்லும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சியை இலங்கை அடைந்த காலப்பகுதி அது. அர்ஜுன, அரவிந்த, சனத், வாஸ், முரளி என்கின்ற பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் இல்லை யென்றாலும் இலங்கை கிரிக்கட் அணி தன்னை விஸ்வரூபப்படுத்தி காட்டியிருக்க முடியுமா? என்றால் அதற்க்கு  இல்லை என்பதே சரியான பதிலாக  இருக்கும். 1996 உலக கிண்ண போட்டிகளின் நாயகர்களான அர்ஜுனவும், அரவிந்தவும் 1999 உலக கிண்ண போட்டிகளில் இலங்கையின் படுதோல்விக்கு பின்னர் கறிவேப்பிலையை போல தூக்கி எறியப்பட்டது வரலாறு, இன்று அந்த வரலாற்றில் வாஸும், சனத்தும் உள்ளடக்கம்.

இலங்கை தேர்வுக்குழுவினர் சனத்தை தேர்வு செய்யாததை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சமிந்த வாஸை தேர்வு செய்யாதது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. நீண்ட நாட்களாக இலங்கை அணியில் இடம் கிடைக்காத வாஸ் இங்கிலாந்து பிராந்திய அணிகளுக் கிடையிலான  போட்டியில் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரருக்கான விருதினை வென்று தன்னை வெளிக்காட்டியிருந்தார். தற்போது இலங்கை பிராந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்துவீசி எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தார், ஆனால் இந்த போட்டிகளுக்கு முன்னதாகவே இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டது வாசினதும் இலங்கை கிரிக்கட் அணியினதும் துரதிஸ்டம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியிலாவது வாசினை அணியில் சேர்த்திருக்கலாம், ஆனால் வாஸ் சிறப்பாக பந்து வீசினால் தமது தேர்வு தவறாகிவிடும் என்கின்ற பயம் தேர்வாளர்களுக்கு
நுவான் குலசேகர, லசித் மலிங்க இருவருக்கும் பதிலாக சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாவிட்டாலும் 'டில்ஹார பெர்னாண்டோ'வுக்கு பதிலாக கூடவா சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாது? இலங்கை  ஆடுகளங்களில் குறிப்பாக பிரேமதாசா ஆடுகளத்தில்  வாஸ் அளவிற்கு சிறப்பாக பந்துவீசக் கூடிய பந்து வீச்சாளர் யாருமே சர்வதேச அளவில் இல்லை என்பதுதான் உண்மை. அடுத்து அண்மைக்கால இலங்கையின் நம்பிக்கை சுழல் பந்து வீச்சாளரான 'சுராஜ் ரன்டிப்' நீக்கப்பட்டு 'ரங்கன கேரத்' சேர்க்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பதை என்னைபோல இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் .அதேபோல உலகக் கிண்ண ஸ்பெசலிஸ்ட்டாக அணியில் இணையும் 'சாமர சில்வா' சென்ற உலகக் கிண்ண போட்டிகளில்  வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக்  கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்துவாரா என்பது சந்தேகமே.

இப்படி அணியின் தேர்வுக்குழுவின் தேர்வின் மீது திருப்தியில்லா விட்டாலும்  இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான சவாலை கொடுக்க கூடிய சிறந்த அணியாக இலங்கை உள்ளதையும் மறுக்க இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடுகளம், பந்துவீச்சாளர் பேதமில்லாமல் ஓட்டங்களை வேகமாக குவித்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் டில்ஷான் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையின் மிகப்பெரும் பலம். அதிலும் ஆசிய ஆடுகளங்களில் டில்ஷானின் அதிரடியை சமாளிப்பது எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.  அதே நேரம் டில்ஷானுடன் களமிறங்கும் சக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 'உப்புள் தரங்கா'வை ஆரம்பத்தில் வெளியேற்றா விட்டால் தரங்கவினது ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

அடுத்து மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கும் குமார் சங்கக்காராவை அவளவு சீக்கிரத்தில் வெளியேற்ற முடியாது, அட்டைபோல ஆடுகளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்ககார யாரவதொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரருடன் இணைப்பாட்டத்தை ஏற்ப்படுத்தினால் எதிரணி கதை அம்பேல்தான். தனது விக்கட்டை இழக்காமல் ஓட்டங்களை குவிக்கும் திறமையுடைய சங்ககார  ஒருபுறத்தில் விக்கட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனித்து நின்று கணிசமான ஓட்டங்களை பெற்று போட்டியை பந்து வீச்சாளர்கள் கைகளிலாவது ஒப்படைக்க கூடியவர். ஆரம்ப நாட்களில் மந்தமாக இருந்த ஓட்டக் குவிப்பு வேகம்  ஐ.பி.எல் போட்டிகளின் பின்னர் அதிகரித்திருப்பதும் இலங்கைக்கு பலம்.

நான்காம் இலக்கத்தில் களமிறங்கும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் போம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் (in form) எதிரணிகள் பாடு  திண்டாட்டமாகவும்; போம் மோசமாக  இருக்கும் பட்சத்தில் (out of form) எதிரணிகள் பாடு கொண்டாட்டமாகவும் இருக்கும். வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை ரகத்தை சேர்ந்த மஹேலாவின் ஓட்டக் குவிப்பிற்கு  2003 & 2007 உலககிண்ண போட்டிகள் சான்று. தனி மனிதனாக போட்டிகளின் முடிவை மாற்றக் கூடிய திறமையுடைய மஹேலாவை வந்தவுடன் வெளியேற்றாவிட்டால் பின்னர் வெளியேற்றுவது எதிரணிகளுக்கு  சிரமமாக இருக்கும். சுழல் பந்துவீச்சிற்கு மிகவும் சிறப்பாக ஆடும் மஹேலவுடன்  இலங்கையின் மத்திய வரிசைக்கு  பலம் சேர்க்கும் இன்னுமொரு வீரர் 'திலான் சமரவீரா'
சாமர சில்வா, கப்புகெதர இருவரையும்விட திலான் சமரவீரா ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். அண்மைக்காலமாக இவரது ஆட்டத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரும் மாற்றம் இவரது வேகமான ஓட்டக் குவிப்புத்தான். நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்கும் போட்டிகளை கொண்டு செல்வதற்கு திலான் சமரவீர மிகவும் பொருத்தமாக இருப்பார். ஆறாம் இலக்கத்தில் 'அஞ்சலோ மத்யூஸ்' மற்றும் ஏழாம் இலக்கத்தில் 'திசர பெரேரா'  இருவரும் இறுதிநேர அதிரடிக்கு உதவக் கூடியவர்களாயினும்  அவர்களில் மத்யூஸ் எதிரணியின் ஓட்டங்களை துரத்தும்போது போட்டியின் தன்மைக்கேற்ப ஆடக் கூடியவர்.

பந்து வீச்சை பொறுத்தவரை 2011 உலக கிண்ண போட்டிகளில் மிகவும் சிறந்த பந்துவீச்சு வரிசை என்று இலங்கை அணியை  சொல்லலாம். அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கக் கூடிய 'முரளிதரன்' மற்றும் 'லசித் மலிங்க'வுடன் ஆசிய அணிகள் தவிர்த்து எந்த அணியையும் நிலைகுலைய வைக்கும் திறமையுடைய 'அஜந்த மென்டிஸ்' அணியில் இருப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம். இவர்கள் தவிர கடந்த ஓராண்டுக்கு மேலாக தரவரிசையின் முதல் பத்து  இடங்களுக்குள் இருந்து வரும் நுவான் குலகேகரவும்; சகதுரை வீரர்களாக பந்துவீச்சில் அண்மைக்காலமாக பிரகாசிக்கும் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திசர பெரேராவும் இலங்கை பந்துவீச்சு வரிசையின் பலம்.

இவற்றைவிட சொந்த மண்ணில் முதற் சுற்று ஆட்டங்கள் இடம்பெறுவதும், அடுத்தகட்ட போட்டிகள் இந்திய ஆடுகளங்களில் இடம்பெறுவதும் இலங்கைக்கு சாதகமான விடயங்களே. ஆனாலும் பலமான இந்திய, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளை இலங்கை எதிர்கொள்வது மிகவும் சவாலான விடயமாகத்தான் இருக்கும். 1996 உலக கோப்பை வெற்றியின் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளில் அரைஇறுதிக்கும்  2007 உலகக் கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிக்கும் தெரிவான இலங்கை அணி இம்முறை காலிறுதிக்கு நிச்சயம் தகுதிபெறும் ஆயினும் அடுத்த நிலைகளை தாண்டி கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றுமா? என்கின்ற கேள்விக்கு கைப்பற்றுவதற்கு  தகுதியான அணிதான் என்பது சரியான பதிலாக இருக்கும்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு
திலகரட்னே டில்ஷான்
உப்புள் தரங்க
குமார் சங்ககார (தலைவர்) & (விக்கட் காப்பாளர்)
மஹேல ஜெயவர்த்தன
திலான் சமரவீர
அஞ்சலோ மத்யூஸ்
திசர பெரேரா
நுவான் குலகேகர
முத்தையா முரளிதரன்
லசித் மலிங்க
அஜந்த மென்டிஸ்

மிகுதி நால்வரும்:-
சாமர கப்புகெதர
சாமர சில்வா
டில்ஹார பெர்னாண்டோ
ரங்கன ஹேரத்

இந்த உலகக் கிண்ணம் இந்தியாவிற்கு மிகவும் அவசியமானது. ...

இந்தியா




ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த அனைத்து நாடுகளிலும் கிரிக்கட் மோகம் இருந்தாலும் இந்தியா அளவிற்கு கிரிக்கட்மீது வெறிகொண்ட ரசிகர்கள் வேறெந்த ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகளிலும் இல்லை என்றே சொல்லலாம். வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்போது வீரர்களை கொண்டாடும் ரசிகர்கள் தோல்விகளை சந்திக்கும்போது தாம் கொண்டாடிய வீரர்களையே வசைபாடுமளவிற்கு கிரிக்கட்டின்மீது அதீத ஈடுபாடு உடையவர்கள். இப்படி கிரிக்கட்டை ஒரு மதமாகப் பார்க்கும் இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கு சொந்த நாட்டிலே உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெறும்போது உணர்வு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 1983 முதல் 28 ஆண்டுகளாக உலகக் கிண்ண கனவுடன் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கும்; ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கான அதிகமான சாதனையை தன்னகத்தே வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு மணிமகுடமாகவும் இந்த உலகக் கிண்ணம் இந்தியாவிற்கு மிகவும் அவசியமானது.



பலமான மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 1983 இல் தனது முதல் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இந்தியா அதன் பின்னர் icc நடாத்திய சுற்றுப் போட்டிகளில் இலங்கையுடன் 2002 இல் இணை சாம்பியனாக கிண்ணத்தை பகிர்ந்து கொண்டதுடன்; icc யின் முதல் T/20 உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளது. 2003 உலகக் கிண்ண போட்டிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணிக்கு கிண்ணத்தை வெல்வதற்கு அவுஸ்திரேலியா அனுமதிக்கவில்லை. அதேபோல அடுத்த உலக கிண்ண போட்டிகளில் (2007) அடுத்த சுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கு பங்களாதேஷ் முட்டுக் கட்டையாக இருக்குமென்று யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 2003 உலகக் கிண்ண போட்டிகளில் இந்தியாவின் வெளியேற்றம் பல முன்னணி வீரர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது நினைவில் இருக்கும் என்பதால் இம்முறை இந்தியர்கள் மிகவும் அவதானமாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.



இந்திய அணியின் மிகப்பெரும் பலம் என்று சொல்வதென்றால் அது அவர்களின் ஸ்திரமான துடுப்பாட்ட வரிசைதான். 2011 உலகக் கிண்ண அணிகளுள் மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசை என்று இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை குறிப்பிடலாம். அணியிலுள்ள 8 துடுப்பாட்ட வீரர்களில் ஏழு வீரர்களை அணியில் தெரிவு செய்வதே அணித் தேர்வின்போது மிகவும் சிரமமான விடயமாக இருக்கும் என்பதில் இருந்து இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையின் பலத்தை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பொசிஷனுக்கும் ஏற்றால்ப்போல சிறப்பான வீரர்கள் துடுப்பாட்ட வரிசையில் இருப்பது இன்னமும் சிறப்பு.



ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இன்றைய தேதியில் உலகின் சிறந்த ஜோடியான சச்சின் டெண்டுல்க்கர் மற்றும் வீரேந்திர சேவாக். இவர்கள் இருவரையும் பற்றி என்ன சொன்னாலும் அது எல்லோருக்குமே தெரிந்த விடயமாகத்தான் இருக்கும் என்பதால் இவ்விருவரையும் பற்றி அதிகமாக சொல்லத்தேவை இல்லையென்றாலும் ஷேவாக்கை முதல் பத்து ஓவர்களுக்குள் வெளியேற்றத் தவறினால் ஏற்ப்படும் விளைவையும் சச்சின் தனது முழுமையான இனிங்க்ஸ் ஒன்றை வெளிப்படுத்துவதால் ஏற்ப்படும் விளைவையும் எதிரணிகள் அறியாமல் இல்லை என்பதால் இந்தியாவுடனான போட்டிகளில் இவ்விருவரையும் வெளியேற்று வதற்குத்தான் எதிரணியினரின் அதிக சிரத்தை எடுப்பார்கள்.



வேகம், சுழல் பந்து வீச்சுக்களுக்கும்; ஓப் (off side), ஓன் (on side) திசைகளிலும்; நேர்த்தியாகவும், வேகமாகவும்; போட்டியின் தன்மைக்கேற்ப துடுப்பாடக்கூடிய இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான 'கௌதம் கம்பீர்' மூன்றாம் இலக்கத்திற்கு வலுச்சேர்க்கும் அதேநேரம் இன்னுமொரு எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான மிகச்சிறந்த போமிலிருக்கும் (form) 'வீராட் கோளி' நான்காம் இலக்கத்திற்கு சிறப்பான வீரராக இருப்பார். நான்காம் இலக்கத்திற்கு அன்பவம் குறைவான வீரராக 'கோளி' இருப்பினும் அதுவே அவருக்கு அழுத்தமில்லாமல் ஆடுவதற்கு எதுவாக அமைந்துவிடும் என்பதால் 'கோளி' நான்காம் இலக்கத்திற்கு சரியான தெரிவாக இருப்பார்.



ஐந்தாம் இலக்கத்திற்கு 'யுவராஜ் சிங்'கை அணியில் இணைப்பதா அல்லது 'சுரேஷ் ரெய்னா'வை இணைப்பதா என்பதுதான் பிரச்சனையே. யுவராஜ் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த வீரராக இருப்பினும் 'ரெய்னா' மீதுதான் 'டோனி'யும் ரசிகர்களும் அதிகளவு நம்பிக்கை வைத்திருப்பதால் ஐந்தாம் இலக்கத்தில் 'ரெய்னா'வே விளையாடும் சந்தர்ப்பம் அதிகம் என்றாலும் எனது தெரிவு 'யுவராஜ் சிங்'தான். அன்றைய நாள் அவர்களுடையதாக அமையும் பட்சத்தில் 'ரெய்னா'வை விட 'யுவராஜ் சிங்'கின் இனிங்க்ஸ் மிரட்டக்கூடியதாக அமையும் என்பது யாராலும் மறுக்கமுடியாதது. அடுத்து கையைவிட்டுப் போன ஒரு போட்டியை மீண்டும் இந்தியாவின் கைகளுக்குள் கொண்டுவரும் ஆற்றல் படைத்த ஒரே வீரர் யுவராஜ்தான் என்பதாலும் யுவராஜ் அணியில் இருப்பது இந்திய அணிக்குத்தான் சிறப்பு.



ஆறாம் இலக்கத்தில் 'டோனி' இன்று சிறந்த போமில் (form) இல்லாதது இந்தியாவிற்கு பாதகமான விடயமாக இருந்தாலும் டோனி போன்ற வீரர்களுக்கு போமாக (form) ஒரு போட்டி போதும் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 'டோனி'யுடன் சேர்ந்து பினிஷிங் கொடுப்பதற்கு 'யூசப் பதான்' ஏழாம் இலக்கத்தில் களமிறங்குவதும்; எட்டாம் இலக்க வீரராக களமிறங்கும் ஹர்பஜனின் அதிரடியும் இந்திய துடுப்ப்பாட்ட வரிசையின் பலமான விடயங்கள். ஆசிய ஆடுகளங்கள் என்பதால் இந்திய அணியின் துடுப்பாட்டத்தை கட்டுபடுத்துவது எதிரணியினருக்கு மிகவும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமேதுமில்லை .



துடுப்பாட்டத்தில் இந்திய அணி எப்படி பலமாக உள்ளதோ அதற்க்கு நேர்மாறாக பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் பலவீனமாக உள்ளதுதான் இந்திய அணியின் பிரச்சனையே. சஹீர்க்கான், ஹர்பஜன் சிங்; இவ்விருவரையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை உள்ளது. ஆடுகளங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் சிறப்பாக பந்துவீசும் சஹீரை எல்லா நேரங்களிலும் நம்ப முடியாது. ஆனால் ஹர்பஜன் ஆசிய ஆடுகளங்களில் எதிரணியினருக்கு மிகுத்த சவாலாக இருப்பார். ஆசிஸ் நெஹரா, பிரவீன் குமார், முனாப் பட்டேல் போன்றவர்களை அன்றைய நாள் நன்றாக இருந்தால் மட்டுமே நம்பமுடியும். ஆசிய நாடுகள் தவிர்த்து ஏனைய நாடுகளுடனான போட்டிகளில் அஸ்வினை அணியில் இணைப்பது இந்தியாவிற்கு உபயோகமாக இருக்கும். களத்தடுப்பு; ஆயிரம் பெரியார் வந்தாலும்...... போன்ற மேட்டர்தான்.



மிகப்பெரும் ஓட்ட எண்ணிக்கையை இந்தியா குவிக்கும்போது கட்டுப்படுத்தும் வல்லமையுள்ள இந்திய பந்துவீச்சாளர்களுக்கு குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகவே இருக்கும். ஆனாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்களில் (அப்படித்தான் அமைப்பார்கள் என்று நம்பலாம்) இந்தியா ஓட்டக் குவிப்பாலும் சஹீர், ஹர்பஜன் மற்றும் பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர்களான ஷேவாக், யூசப், சச்சின், யுவராஜ்/ரெய்னா போன்றவர்களினது துணையினாலும் எதிரணியினருக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பார்கள் என்று நம்பலாம். 2011 உலக கிண்ணத்தை வெல்வதற்கு சாத்தியமான அணி என்று பலராலும் ஆரூடம் கூறப்படும் இந்தியா; இந்ததடவை உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான சாத்தியம் அதிகமாக உள்ள அணிகளில் முதன்மையானது என்பதை மறுப்பதற்கில்லை.