Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

திங்கள், 28 மார்ச், 2011

சில்ரன் ஆப் ஹெவன் (குழந்தைகளுக்கும் சுவர்க்கத்திற்குமிடையிலான உறவு)

CHILDREN OF HEAVEN
           சில்ரன் ஆப் ஹெவன்
                                  (குழந்தைகளுக்கும் சுவர்க்கத்திற்குமிடையிலான உறவு)


சில்ரன் ஆப் ஹெவன் 1997 ஆம் ஆண்டு இரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். மஜித் மஜித் படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் பிடிக்கும். அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் ஓர் பொக்கிசம். 
 சகோதரர்களான அலியும், சாராவும், அவர்களுக்கிடையே மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலணிகளும்தான் சில்ரன் ஆப் ஹெவன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாகவமைய, படம் முழுக்க உரையாடிக் கொண்டிருப்பது அச்சிறுவர்களின் பார்வைப் பரிமாற்றங்களும், அந்த அழுக்குக் காலணிகளுமே.....

சிறுமி சாராவின் ரோஸ் நிறக் காலணிகள் தைக்கப்படுவதிலிருந்து தொடங்கும் படம், அக்காலணிகள் அண்ணனான அலியின் கவனக்குறைவினால் தொலைந்து போக.. காலணியில்லாமல் பாடசாலைக்குச் செல்லவழியில்லாது அலியின் காலணிகளையே இருவரும் மாற்றி மாற்றிப் பாவிப்பதும், தொலைந்துவிட்ட காலணியைத் தேடும் படலம் தொடர்வதும், இனியும் அதனால் பயனில்லையெனத் தெரிந்து குற்றவுணர்ச்சியோடு புதுக்காலணி வாங்குவதற்கான வழிவகைகளை அலி திட்டமிடுவJ njspthfj; njupfpd;wJ.

சாதாரணத் தொழிலாளியான அப்பா,
நோய்வாய்ப்பட்ட அம்மா,
                        நினைத்தமாத்திரத்தில் புதிதாக காலணிகள் வாங்கவியலாதளவு வறிய குடும்பப் பின்னzp சகோதர பாசம் மனதை நெகிழவைத்தது. காலணிகள் தனது கவனக்குறைவினால் தொலைந்தமை வீட்டிற்குத் தெரியவந்தால் அப்பாவிடம் திட்டு வாங்க நேரிடுமென்பதால் எவரிடமும் சொல்லவேண்டாமென்றும், தனது காலணிகளைப் பயன்படுத்தும்படியும் அலி சாராவைக் கெஞ்சுவதும்.. வேறுவழியின்றி அவள் ஒத்துக்கொள்வதும்.. vkJ fz;fis fyq;f itf;fpd;wJ.
                
அண்ணனின் காலணிகளோடு பாடசாலை செல்ல நேரும் முதல்நாளில் சாரா உணரும் குறுகுறுப்பையும், வெட்கத்தையும் இயக்குனர் பதிவுசெய்திருந்த விதம் இரசிக்கவைத்தது. தனது பாடசாலை முடிவடைந்தவுடன் மூச்சிரைக்க ஓடிவந்து அலியிடம் காலணிகளை ஒப்படைப்பதும், அலி அதனை மாற்றிக்கொண்டு மூச்சிரைக்க தனது பாடசாலைக்கு ஓடுவதும் vkJ fz;fis fyq;f itf;fpd;wJ.

மனதை மிகவும் கவர்ந்த, மூச்சைப்பிடித்துக் கொண்டு பார்க்கவைத்த காட்சி: இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க.. சாராவிற்கு அலியின் காலணிகள் அளவிற் பெரிதாகையால், ஒருநாள் அவள் அவசரத்துடன் ஓடி வருகையில் காலணியொன்று நழுவி வாய்க்காலொன்றினுள் வீழ்ந்தது

காலணியை சிறுமிக்குதவும் நோக்கில் ஒரு பெரியவர் எடுத்துவிட முயற்சிக்கும்போதும் அடுத்த கணம் அவரது கைகளிலிருந்து நழுவி அது மறுபடியும் வீழ்ந்துகொண்டபோது மூச்சு ஒருகணம் நின்றே போயிருந்தது. பின்னர் வாய்க்கால் சுத்திகரிப்பவரொருவரால் அக்காலணி காப்பாற்றப்பட்ட போது சாராவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.


தங்கைக்கு எப்படியாவது ஒரு காலணியைப் பெற்றுத்தந்துவிட வேண்டுமென்ற அலியின் iககளில் ஒரு மரதனோட்டப்போட்டி - அதில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொள்பவருக்கு காலணிகள் பரிசாக வழங்கப்படுமென்ற  அறிவிப்பு. இருவரும் குதூகலத்துடன் சோப்பு நுரைகளைக் கொண்டு விளையாடுவதும். ஒருகட்டத்தில் தான் முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தும் மூன்றாவது இடத்தைத்தானே பிடிக்கவேண்டுமென்ற நினைப்பு வந்து தாக்க, வேண்டுமென்றே தனது வேகத்தைக் குறைத்து இருவரைத் தன்முன்னே அனுமதிக்கும்போது, கவலை உள்ளத்தில் கவிந்துபோனது.., கூடவே ஒரு பதட்டமும்.. ஒருவேளை மூன்றாவது ஸ்தானம் கிடைக்காமல் போகுமானால்...

இறுதியாக, போட்டியில் முதலிடம் வென்று கோப்பையைத் தூக்கும்போது அலி எவ்வித சந்தோஷமுமில்லாது விக்கி விக்கி அழும்.. மூன்றாவது பரிசான காலணிகளைப் பார்த்து ஏங்கும் அவன் போட்டியிட முன்வந்ததே காலணிக்காகத்தானென்பதால்  காட்சி மனதை kpfTk; ftu;e;jJ.
                                         

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக