Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 15 மார்ச், 2011

பிரிவின் அருகில் !!

துன்பத்தின் வாசலில் என் காதல் என்னும் வாசகம்… உன் காதல் யாசகத்திற்காய் காலடியில் காத்திருந்த காலங்கள் இன்று கலைந்து காணாமல் போக காத்து நிக்கின்றன… உன் காதல் வாழ்வு கானல் என்று தெரிந்தும் காதலித்தவன் நான் பொங்கும் கண்ணீரில் முத்தெடுக்க துணிந்தவன் நான் தோல்வி என்று அறிந்தும் உன் காதலுக்காய் களம் கண்டவன் நான்…. இன்று தோல்வி என்னும் பட்டத்துடன்- உன் காதல் என்னும் கல்வி கூடத்தில் இருந்து ஆயிரம் ஆயிரம் பாடங்களுடன் வெளியேறி போகிறேன்… உன் நினைவுகள் என்னும் கத்தி கிழித்து- காயத்தினால் குருதியில் குளித்து- வலி கண்ட இதயத்தை மட்டும் உன்னிடம் விட்டு விட்டே செல்கிறேன்… கூடவே மனமும் வர மறுத்து அடம் பிடிக்கிறது- அதுவும் உன்னை சுமந்து ரணம் கண்ட உன் சொத்து தானே… என்னை தோற்கடித்து நீ கண்ட வெற்றி காதலுக்கெதிரான போட்டியில் உன் வெற்றி- நாளையே மாறி போகலாம் உன் மனமும் இன்னொருவனிடம் கை மாறலாம் நீயும் காதலில் விழலாம்.. அன்றாவது என்னையும் ஒரு முறை நினைத்து கொள்… எதிர் பார்த்த பிரிவு என்றாலும் ஏனோ மனம் துடிக்க தான் செய்கிறது உனக்காய் துடித்த உசிர் உருகத் தான் செய்கிறது உன்னை சுமந்த கண்கள் கசிய தான் பார்க்கிறது… காதலின் வலியை சுமந்து கொண்டு- பிரிவு என்னும் வாசலின் அருகில்- கதவினை தட்டுவதட்காய் காத்து நிக்கிறேன்- என்றும் என்னுடன் வாழ போகும் உன் நினைவுகளை மட்டும் வைத்து கொண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக